இந்தியா

மேலும் குறைகிறது பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை? - தனியார் வசம் ஒப்படைக்க அரசு திட்டம்

JustinDurai

நாடு முழுவதும் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளை ஐந்து வங்கிகளாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்ட  நடவடிக்கையாக சில வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் 12 பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலையில் அதில் பாதிக்கு மேல் குறைக்க மத்திய அரசு அரசு திட்டமிட்டுள்ளது. வங்கித் துறையில் இந்த தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்காக புதிய தனியார்மயக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,  யூசிஓ பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் பேங்க் ஆகிய வங்கிகளின் பெருமளவு பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.  அதன்படி 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.