இந்தியா

மேகாலயா குகைப்பகுதியில் கண்டறியப்பட்ட புதியவகை நத்தை

Sinekadhara

மேகாலயாவின் குகைப்பகுதியிலிருந்து சிறியவகை நத்தையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேகாலயா மாநிலத்தின் மலைப்பகுதி மாவட்டமான கிழக்கு காசி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மாவ்ஸ்மாய் கிராமம். இந்த கிராமத்திலுள்ள ஒரு சுண்ணாம்புக் குகையின் உட்பகுதியில் சிறிய நத்தை வகை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த அசோகா ட்ரஸ்ட்டின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிப்பு குமார் தாஸ் மற்றும் அரவிந்த் மத்யஸ்தா ஆகிய இருவரும் அந்தப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த நத்தை இனத்தைக் கண்டறிந்துள்ளனர். மாவ்ஸ்மாய் கிராமத்தில் கண்டறியப்பட்டதால் இந்த நத்தைக்கு ’ஜியோரிஸா மாவ்ஸ்மாயினிசிஸ்’(Georissa mawsmaiensis) என்று பெயர் சூட்டியுள்ளனர்.