இந்தியா

மெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை 

மெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை 

webteam

மெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு வந்தடைந்தனர். 

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா எல்லையில் தடுப்புச்சுவர் ஒன்றை எழுப்பியிருக்கிறது. மேலும் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மெக்சிகோவிலிருந்து தங்களது நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வரியை உயர்த்துவோம் என எச்சரித்துள்ளது. ‌

இதனை அடுத்து மெக்சிகோ அ‌ரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மெக்சிகோவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 300க்கும் அதிகமான இந்தியர்கள் கண்டறியப்பட்டு, அவர்க‌ள் விமானம் மூலம் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தவர்கள் எனக் கூறப்படுகிறது.