இந்தியா

ஸ்ட்ரெச்சர் இல்லை என்பதற்காக இப்படியா செய்வாங்க?

ஸ்ட்ரெச்சர் இல்லை என்பதற்காக இப்படியா செய்வாங்க?

Rasus

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், உறவினர்களால் தர தரவென இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.

32 வயதான சகுந்தலா தேவி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆர்ரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்தப் பெண்ணின் கணவர் அனில் ஷா தனது மனைவியை வெளி நோயாளி அறைக்குக் கொண்டு செல்ல, ஸ்ட்ரெச்சர் கேட்டதாகக் கூறப்பட்டுகிறது. ஆனால் ‌போதிய‌ ஸ்ட்ரெச்சர் இல்லை என மருத்து‌வமனை ஊழியர்கள் மறுப்‌பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்தப் பெண்ணை கையை பிடித்து தரையிலேயே இழுத்து‌சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.‌ இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஆரா மருத்துவமனை சர்வதேச தர நிர்ணய அமைப்பின் (ISO) சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.