இந்தியா

ஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூடக்கூடாது: புதிய உத்தரவு

ஆக்ராவில் ஆண்கள் முகத்தை மூடக்கூடாது: புதிய உத்தரவு

webteam

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில், 18 வயது முதல் 30 வயது வரை உள்ள ஆண்கள் பொது இடங்களில் முகத்தை மூடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ஆணையர் ராம்மோகன் ராவ் கூறியதாவது, மதுரா அருகே முகமூடி கொள்ளையர்கள் நகை கடையை கொள்ளையடித்ததுடன், 2 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். இதேபோல், பிரோசாபாத் அருகே தொழிலதிபர் ஒருவரை சிலர் கடத்தி சென்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் தங்கள் முகத்தை துணியால் மூடியபடி செல்வது காணப்படுகிறது.

எனவே, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளில், 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தங்கள் முகத்தை மூடியபடி பொது இடங்களில் நடமாட கூடாது. மேலும், சாலையில் நடந்து செல்லும் போது ஹெல்மட் அணிந்தபடி செல்ல கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.