அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரையில் திரண்டிருந்த இளம் ஜோடிகளை பஜ்ரங் தள் அமைப்பினர் விரட்டியடித்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்து முன்னணி, பஜ்ரங் தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சில அமைப்புகள் கையில் தாலியுடன் சென்று காதலர்களை திருமணம் செய்து கொள்ளுபடி கட்டாயப்படுத்துகிறார்கள். சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு காதலர்கள் மீது தாக்குதல்களும் நடத்துகின்றனர்.
இந்நிலையில், சபர்மதி ஆற்றங்கரைக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் ஜோடிகளாக வந்த காதலர்கள், அங்கு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது காதலர் தினத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பிய பஜ்ரங் தள் அமைப்பினர், தடிகளை கொண்டு காதல் ஜோடிகளை விரட்டியடித்தனர். இதையடுத்து பத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.