இந்தியா

மேகதாது விவகாரம் - கர்நாடக மாநில முதல்வர் டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

மேகதாது விவகாரம் - கர்நாடக மாநில முதல்வர் டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

Veeramani

மேகதாது உள்ளிட்ட நீர் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கர்நாடக மாநில முதலமைச்சர் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

மேகதாது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து இன்று காலை கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே புரிந்துணர்வு ஏற்பட்டால் மட்டுமே முழுமையான அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்தது குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. அதேபோல, கிருஷ்ணா, மகதாயி உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீர் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கர்நாடக மாநில சட்டத்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்களை கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து, நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.