மேகாலயா ஆளுநர் சண்முகநாதனின் பதவி விலகலை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மேகாலயாவின் ஆளுநர் பொறுப்பை கவனிக்கும்படி அசாம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத் தலைவர் பணித்துள்ளார். இதேபோல் அருணாச்சலப்பிரதேசத்தின் ஆளுநர் பொறுப்பை நாகாலாந்து ஆளுநர் ஆச்சார்யா கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.
மேகாலயா மற்றும் அருணாச்சலப்பிரதேச ஆளுநர் பொறுப்புகளை வகித்து வந்த சண்முகநாதன் ஆளுநர் மாளிகையின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து, அவர் பதவியில் இருந்து விலகினார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.