இந்தியா

மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்: சாதித்த ரிது நர்வால்

மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்: சாதித்த ரிது நர்வால்

JustinDurai
மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், 35 வயதான ரிது நர்வால்.
மத்தியப் பிரதேசத்தின் அரசுப் பேருந்து போக்குவரத்து கழகமான அடல் இந்தூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட்டில் பேருந்து ஓட்டுநராக பணியில் சேர்ந்துள்ளார் ரிது நர்வால். மகளிருக்கான சிறப்புப் பேருந்தை இயக்கவிருக்கும் ரிது நர்வால், மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். டெஸ்ட் டிரைவிங்கில் பேருந்தை சிறப்பாக இயக்கியதைத் தொடர்ந்து, ரிது நர்வாலுக்கு பயணிகள் பேருந்தை இயக்க ஆணை வழங்கப்பட்டது.
தனது 28 வயதில் ஓட்டுநர் உரிமம் பெற்ற ரிது நர்வால், பேருந்து போன்ற கனரக வாகனங்களை இயக்குவதை அவரது பெற்றோர் விரும்பவில்லை. ஆனால் கனரக வாகனங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அவர் தனது இலக்கில் பின்வாங்கவில்லை. நாள்போக்கில் மகளின் ஆர்வத்தை புரிந்துகொண்ட அவரது தந்தை ரிது நர்வால் ஓட்டுநர் பணியில் சேருவதற்கு துணையாக நின்றார். பேருந்து ஓட்டுநராக தேர்வானதை தொடர்ந்து, தனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரிது நர்வால்.