தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயாரியிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று தனது 67-வது பிறந்தநாள். அதையொட்டி அலகாபாத் வந்த அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு பாஜக சார்பில் அளிக்கப்பட்டது. தலைநகர் காந்தி நகரின் அருகே அமைந்திருக்கும் தனது இளைய சகோதரர் பங்கஜின் இல்லத்திற்கு சென்ற பிரதமர், அங்குள்ள தனது தாய் ஹிராபாவைச் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றார். தனது தாயாருடன் 20 நிமிடங்கள் செலவிட்ட பிரதமர் மோடி, பின்னர் அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.