உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் மருத்துவ மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் லாலா லஜபதிராய் மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் 1992 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பல சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அங்கு இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த வாகனம் மருத்துவ கல்லூரி வாகனமா அல்லது தனியார் ஆம்புலன்ஸ் வாகனமா என தெரியவில்லை. மதியத்திற்கு மேல் நடைபெற்ற விழாவில் மது விருந்து அளிக்கப்பட்டுள்ளது.மேலும், ரஷ்ய பெல்லி நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர், சம்பந்தப்பட்ட துறையினரிடம் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.