புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி படிப்பில் விதிகளை மீறி மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. ஆகவே அவ்வாறு சேர்க்கப்பட்ட 770 மாணவர்களின் சேர்க்கை செல்லாது எனவும் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவால் மருத்துவ மாணவர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ என அவர்கள் கவலை கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். ஏற்கனவே ‘நீட்’ மூலம் மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எதிராக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலின் இந்த உத்தரவு அதிரடியாக வெளியாகியுள்ளது.