இந்தியா

தீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது - பிரதமர் மோடி

தீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது - பிரதமர் மோடி

webteam

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

70 ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது. நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை அயோத்தி தீர்ப்பு உணர்த்தி இருக்கிறது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும். ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது'' என தெரிவித்துள்ளார்