Headlines pt
இந்தியா

Headlines|12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முதல் எல்லையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முதல் எல்லையில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம் வரை உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

PT WEB
  • தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு . மாணவர்கள் இணையதளம் மற்றும் பயின்ற பள்ளிகளில் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு.

  • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம். பூஞ்ச் செக்டாரில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணம்.

  • இந்தியாவின் தாக்குதலுக்கு பழிவாங்குவோம். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

  • இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல். மோதலை முடிவுக்கு கொண்டுவர உதவ முடிந்தால் நிச்சயம் செய்வேன் என்றும் உறுதி.

  • போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒருபகுதியாக டெல்லி, பிஹார் மாநிலங்களில் மின் விநியோகம் நிறுத்தம். இருளில் வானில் இருந்து நகரங்களை அடையாளம் கண்டு, தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் ஒத்திகை.

  • மணலி மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு .

  • சென்னையில் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறை. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை தொடர்ந்து உஷார் நிலை.

  • மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம். பாரம்பரிய முறைப்படி பொட்டுக்கார பல்லக்கில் திருமாங்கல்யத்தை பெற்றுச் சென்ற கோயில் நிர்வாகத்தினர்.

  • வைகை அணையில் இருந்து இன்று முதல் 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி தமிழக அரசு நடவடிக்கை.

  • குளித்தலையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் தூக்கி வீசப்பட்ட தகர மேற்கூரை.. வேலூரில் அரசு மாநகர பேருந்துக்குள் ஒழுகிய மழைநீரால் பயணிகள் அவதி.

  • கனமழை காரணமாக மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு. பாதுகாப்பு கருதி, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை.

  • கோபிசெட்டிபாளையத்தில், யூடியூப் பார்த்து வீட்டிலேயே கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த இளைஞரிடம் சுகாதாரத்துறை விசாரணை.

  • மகள் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வருவதாக நினைத்திருந்த பெற்றோர் அதிர்ச்சி.

  • கோவையில் ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்தும், பயணிகள் மீது கல்வீசியும் அத்துமீறல். சிசிடிவி காட்சி வெளியான நிலையில், கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது.

  • புதிய போப்பை தேர்வு செய்வதற்காக கார்டினல்களின் ரகசிய கூட்டம் தொடக்கம். முதலாவது வாக்கெடுப்பில் யாரும் தேர்வாகவில்லை என்பதை குறிக்கும் வகையில் வெளியேறிய கரும்புகை.

  • அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட முடிவா?. சென்னை அணியின் கேப்டன் தோனி சுவாரஸ்ய பதில்.