Headlines pt
இந்தியா

Headlines|வெளுத்து வாங்கிய மழை முதல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வெளுத்து வாங்கிய மழை முதல் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கோடை மழை. அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளிலேயே , மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

  • ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் மழைக்கு முன் வீசிய புழுதிக் காற்றால் மக்கள் அவதி. பூந்தமல்லியில் திரையரங்க மேற்கூரை சரிந்து விழுந்ததால் படம் பார்க்கச் சென்றவர்கள் அச்சம்.

  • கடலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிய மழை. ஈரோடு, மதுரை, கோவையிலும் கோடை மழையால் தணிந்தது வெப்பம்.

  • திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே துணை மின் நிலையத்தை தாக்கிய மின்னல். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெங்களூரு - மதுரை வந்தே பாரத் ரயில்சேவை பாதிப்பு.

  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விமானப் படை தளபதி சந்திப்பு.. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை.

  • காங்கிரஸ் கட்சியின் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்கிறேன் என அமெரிக்க பல்கலைக்கழக நிகழ்ச்சியில், சீக்கியர்கள் படுகொலை பற்றி மாணவர் கேள்விக்கு ராகுல் காந்தி பதில்.

  • திருப்பூரில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் ஆடையில் இருந்த பட்டன்கள் அகற்றம். திருவாரூரில் தாலியை கழட்டி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்ற பெண்.

  • நீட் விவகாரத்தில், திமுகவின் பொய்யால் மாணவ, மாணவிகளின் உயிர் பறிபோவதாக இபிஎஸ் குற்றச்சாட்டு. முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனச்சாட்சி உறுத்தவில்லையா என எக்ஸ் தளத்தில் கேள்வி.

  • பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாதித்தது என்ன? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேள்வி.

  • சென்னையில் நகை வியாபாரியிடம் 20 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருட்டு. வியாபாரியை கட்டிப்போட்டுவிட்டு தலைமறைவான கும்பலுக்கு காவல் துறை வலைவீச்சு.

  • மயிலாடுதுறையில் திமுக கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த மின்விளக்குத்தூண்.. உடனடியாக சுதாரித்து விலகியதால் நூலிழையில் தப்பினார் திமுக எம்.பி. ஆ. ராசா.

  • சென்னை அருகே மத்திய அமைச்சர் ஜெ. பி.நட்டாவின் கார் , பழுதாகி விபத்தில் சிக்கிய விவகாரம். பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.

  • தாராபுரம் அருகே பள்ளத்தில் விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம். பணியில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை.

  • இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல். கடும் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காட்டம்.

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோவை வீழ்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி.