HEADLINES pt
இந்தியா

HEADLINES|கோப்பையை வென்ற RCB முதல் பேச்சுவார்த்தைக்கு அழைத்த கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, கோப்பையை வென்ற RCB முதல் பேச்சுவார்த்தைக்கு அழைத்த கர்நாடக திரைப்பட வர்த்தக சபை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • 18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்றது பெங்களூரு அணி. பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்.

  • பெங்களூரு அணியின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள். பெங்களூரு, சென்னையில் பட்டாசு வெடித்து ஆரவாரம்.

  • சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. கர்நாடகாவுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளதாக முதல்வர் சித்தராமையா பெருமிதம்.

  • பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட விவகாரம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.

  • கன்னட மொழி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ என கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி. கமல்ஹாசனின் கருத்து குளவிக்கூட்டை கலைத்தது போன்று உள்ளதாக நீதிபதி காட்டம் .

  • கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. மன்னிப்பு கேட்பதில் என்ன சிக்கல் என கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்டபோதும் மன்னிப்பு கேட்காத கமல்ஹாசன்.

  • கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார். பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அழைப்பு.

  • அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் அமைச்சர் மா. சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என அண்ணாமலை கேள்வி. தமிழக அரசு இதுபற்றி பேச வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

  • அண்ணாமலையின் குற்றச்சாட்டு என்னவென்றே தெரியவில்லை. தினமும் 15 வட்டச் செயலாளர்கள் தன்னிடம் பேசுவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரை மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பெய்த கனமழையால் தணிந்த வெப்பம்.

  • சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை ராட் வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவம். உரிமையாளரை கைது செய்தது காவல் துறை.

  • திருச்சி விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல். 2 அரிய வகை பல்லிகளையும் கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள்.

  • மதுரை - தூத்துக்குடி சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை. முறையான வசதிகளை செய்யும் வரை தடை விதிப்பதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு.

  • இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது ட்ரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும், மோடி சரண்டர் ஆகிவிட்டார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்.

  • டெல்லி இல்லத்தில் எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம். நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவி நீக்க தீர்மானத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கொண்டு வர மத்திய அரசு முடிவு.