Headlines  pt
இந்தியா

Headlines | வெளுத்து வாங்கும் மழை முதல் ஹைதராபாத்தை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, வெளுத்து வாங்கும் மழை முதல் ஹைதராபாத்தை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை. அணைக்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு.

  • ஆம்பூரில் பலத்த காற்றால் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த கட்அவுட் சாரம் சரிந்து பாதிப்பு. திருப்பூரில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் பறந்த பொருட்கள்; கீழே சாய்ந்த மின்மாற்றி.

  • சங்கரன்கோவிலில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர். கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி.

  • குன்னூர் அருகே சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு; அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

  • மேட்டுப்பாளையம் அடுத்த தோலம்பாளையத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியால் விவசாயி உயிரிழந்த சோகம்.

  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்.

  • அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு. தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அமையும் என்றும் நம்பிக்கை.

  • சாதிவாரி கணக்கெடுப்பிற்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்.

  • தமிழ்நாட்டில் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு. உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை மீட்டு, சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தல்.

  • மத நல்லிணக்கத்தை போற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா. பக்தர்களுக்கு குளிர்பானம், இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி.

  • நாமக்கல் அருகே பாச்சலில், கோயில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் சாலை மறியல். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்; அசம்பாவிதங்களை தவிர்க்க காவலர்கள் குவிப்பு.

  • சேலம் ஓமலூரில் அரணை பல்லி விழுந்த குளிர்பானம் குடித்த சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு. பேக்கரி கடை மீது உணவு பாதுகாப்புத் துறையில் புகார்.

  • தமிழகம் முழுவதும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு. விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என கண்காணிக்க அதிகாரிகளுக்கு ஆணை.

  • கரூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் அமர இடமில்லாமல் ரசிகர்கள் பாதியிலேயே வெளியேறிய விவகாரம். போலி டிக்கெட்டுகள் காரணமாகவே குளறுபடிகள் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காவல்துறையில் புகார்.

  • பெங்களூருவில் ட்ரோன் மூலம் மளிகை பொருட்கள், மருந்துகள் விநியோகம். 10 நிமிடங்களுக்குள் விநியோகம் செய்யும் சேவையை தொடங்கிய பிக் பாஸ்கெட், ஸ்கை ஏர் நிறுவனங்கள்.

  • அர்ஜென்டினா மற்றும் சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் . சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்.

  • ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ். கேப்டன் சுப்மன் கில், பட்லர் அரை சதம் விளாசி அசத்தல்.