Headlines pt
இந்தியா

Headlines | ரெட் அலர்ட் முதல் வெளுத்து வாங்கிய கனமழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ரெட் அலர்ட் முதல் வெளுத்து வாங்கிய கனமழை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை.

  • கன்னியாகுமரியில் பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரம் உடைந்து விழுந்ததில் வீடு சேதம்.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பொழிந்த மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மழையால் தணிந்த வெப்பம்.

  • தென்காசி மாவட்டத்தில் கனமழை. குற்றால அருவிகளில் அதிகரித்த நீர்வரத்து. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை.

  • கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது தமிழ்நாடு அரசு.

  • ரெட் அலர்ட் எதிரொலியாக, கோவை - நீலகிரி மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைப்பு. மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத் துறை அவசர ஆலோசனை.

  • நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை நீடிக்கும். காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.

  • பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதியை வழங்க பிரதமரிடம் வலியுறுத்த திட்டம்.

  • டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு. 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல்.

  • திருச்சி விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன், எல்.முருகனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு. பரஸ்பரம் கைகுலுக்கி நலம் விசாரித்து உரையாடல்.

  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு அம்பலப்பட்டுவிட்டது. டெல்லியில் நடந்த எல்லை பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு.

  • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ராணுவ நடவடிக்கை விவகாரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரிந்துவிட்டது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடும் விமர்சனம்.

  • வடகிழக்கு மாநிலங்களில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவிப்பு. 350 பயோகேஸ் ஆலைகள் நிறுவப்படும் என உறுதி.

  • ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை தடுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை. "தெளிவான சட்டமீறல்" எனக் கூறி ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தொடர்ந்த வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி.

  • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த அமலாக்கத் துறை சோதனையால் பராசக்தி படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படவில்லை என படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி.

  • மணப்பாறை அருகே களைகட்டிய ஆரிய பாப்பாத்தியம்மன் கோயில் வைகாசி திருவிழா. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் சாமி ஊர்வலம்.