Headlines pt
இந்தியா

Headlines|உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் கல்வி நிதி குறித்து நீதிமன்றம் கேள்வி!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி முதல் கல்வி நிதி குறித்து நீதிமன்றம் கேள்வி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • நாட்டை காக்க வீரதீரத்துடன் போராடிய 39 வீரர்களுக்கு கீர்த்தி சக்ரா, சவுர்ய சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

  • நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பயணம். தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிதி தொடர்பாக கூட்டத்தில் வலியுறுத்த திட்டம்.

  • வங்கக்கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதி. பழுது ஏற்பட்ட மின்வயர்கள் சீரமைக்கப்பட்டு மின்சார விநியோகம் சீரானது.

  • தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி. நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்றைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு.

  • காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிட அறிவுறுத்தல்.

  • புதுச்சேரி அருகே வில்லியனூரில் தொழிற்சாலை மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு. லஞ்சம் தர மறுத்ததால் ரவுடிகள் தாக்குதல் எனத் தகவல்.

  • வக்ஃப் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடருமா?. மூன்று நாள் விவாதத்திற்கு பிறகு உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

  • சிங்கப்பூர் அமைச்சரவையில் 6 தமிழர்களுக்கு வாய்ப்பு . உள்துறை அமைச்சராக கே.சண்முகம் நியமனம்.

  • வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலக முகமது யூனுஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல். கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் ராஜிநாமா முடிவு என செய்திகள்.

  • தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக ரவி மோகனின் தோழி கெனிஷா பரபரப்பு குற்றச்சாட்டு. தன் மீது தவறு இருந்தால் நீதிமன்றத்திற்கு கூட அழைத்துச் செல்லலாம் என இன்ஸ்டாவில் பதிவு .

  • குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ ஆறுதல் வெற்றி. மின்னல் வேக சதம் அடித்து அசத்திய மிட்சல் மார்ஷ்.