Headlines pt
இந்தியா

Headlines|பரவலாக கனமழை முதல் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, பரவலாக கனமழை முதல் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக கனமழை. குடியாத்தத்தில் பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்.

  • செங்கம் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம். அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்.

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என உலக சுகாதர சபை கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி பெருமிதம்.

  • வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பக்கிங்காம் கால்வாயில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனை.

  • நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் எனக்கூறிய ஸ்டாலின் இப்போது டெல்லி செல்வதாக இபிஎஸ் விமர்சனம். வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ எனவும் குறிப்பிட்டு இணையத்தில் பதிவு.

  • அதிமுகவுக்கு மக்கள் ஏற்கெனவே தண்டனை வழங்கிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா விமர்சனம். தங்கள் கட்சியை பற்றி பேச ஆதவுக்கு எள்ளளவும் தகுதியில்லை என அதிமுக பதிலடி.

  • வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம். அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் திட்டவட்டம்.

  • பஞ்சாப் பொற்கோயிலில் வான் பாதுகாப்பு அமைப்பு நிலைநிறுத்தமா?. ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு.

  • தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன். மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் வெளியே வருவதில் நீடிக்கும் சிக்கல்.

  • டாஸ்மாக் வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு முறையீடு. வரும் 22ஆம் தேதி பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்ற பதிவாளர் தகவல்.

  • சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது. கைதிகளிடம் சாதி குறித்து கேட்கக்கூடாது என்றும் சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு.

  • சிவகங்கை அருகே கல்குவாரியில் 5 பேர் உயிரிழந்த விபத்தில் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல். மற்ற வைரஸ்களை போலவே கொரோனாவும் இருந்துகொண்டுதான் இருக்கும் என விளக்கம்.

  • நாட்டில் முழு கல்வி அறிவு பெற்ற முதல் மாநிலம் மிசோரம். முதல்வர் லால்டுஹோமா பெருமிதம்.

  • ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

  • பெங்களூருவில் வரும் 23ம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி மழை காரணமாக இடமாற்றம். ஆர்சிபி, சன் ரைசர்ஸ் இடையிலான போட்டி லக்னோவில் நடைபெறும் என அறிவிப்பு.