Headlines pt
இந்தியா

Headlines|போர் நிறுத்தம் செய்ய தயாரான ரஷ்யா முதல் பெங்களூரு சாலைகளை மிதக்கவிட்ட கனமழை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, போர் நிறுத்தம் செய்ய தயாரான ரஷ்யா முதல் பெங்களூரு சாலைகளை மிதக்கவிட்ட கனமழை வரை!

PT WEB
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் இரண்டு மணி நேரம் ஆலோசனை. போர் நிறுத்தம் செய்ய தயார் என புடின் அறிவிப்பு.

  • இனி எக்காலத்திலும் நேட்டோவில் உக்ரைன் சேரக்கூடாது. கிரீமியா பகுதி முழுமையாக ரஷ்யாவுக்கே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்யா நிபந்தனை.

  • ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர வேண்டும் தொலைபேசியில் என பேசிய ட்ரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்.

  • ரஷ்யா - உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை வாடிகனில் நடத்த போப் பதினான்காம் லியோ விருப்பம். தேவையான உதவிகளை செய்ய தயார் என இத்தாலி பிரதமர் மெலோனி அறிவிப்பு.

  • அரபிக்கடலில் 22ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.

  • நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றாலத்தில் சீசன் அறிகுறி. பிரதான அருவி, ஐந்தருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து சுற்றுலாப் பயணிகள் ஆனந்தம்.

  • பெங்களூரு சாலைகளை மிதக்கவிட்ட கனமழை. நீரின் ஆக்ரோஷத்தால் நிலைகுலைந்த வாகன ஓட்டிகள்... பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.

  • மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பட்டணபிரவேசம் கோலாகலம். ஆதினத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் சுமந்து சுற்றிவந்தனர்.

  • இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம்.

  • நீதிபதிகள் மீது வழக்கு தொடர முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டுமா? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு.

  • இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல்.

  • ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்னரே தெரிவித்தது குறைபாடு அல்ல; குற்றம் என ராகுல் காந்தி விமர்சனம். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி.

  • கேரளாவில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தரை ஆளுநர் நியமித்தது செல்லாது. மாநில அரசின் பரிந்துரை இல்லாததால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

  • அதிபர் பதவியில் இருந்தபோது ஜோ பைடன் பணிபுரிவதற்கான உடல் தகுதியுடன் இருந்தாரா? என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கேள்வி.

  • ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோவின் ப்ளேஆஃப் கனவை உடைத்த சன் ரைசர்ஸ். களத்திலேயே மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் ஷர்மா.

  • நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார் விஷால். ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு.