பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல். சாமானிய இந்தியர்களை தொட நினைத்தால் பேரழிவுதான் ஒரே முடிவு என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை.
மத்தியஸ்தம் செய்து இந்தியா - பாகிஸ்தான் இடையே வரலாற்று சிறப்புமிக்க போர்நிறுத்தத்தை கொண்டு வந்தோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பேச்சு.
பிரதமர் மோடி தலைமையில் இன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம். பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தப்பட்ட நிலையில் ஆலோசனை.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை. மேல்முறையீடு செய்ய உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தகவல்.
பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க தங்கள் கட்சியே காரணம் என அதிமுக விளக்கம். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாலேயே நீதி கிடைத்திருப்பதாக பதில்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை அதிமுக மூடி மறைக்க முயன்றதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டு. எடப்பாடி பழனிசாமி புனிதர் வேடம் தரிக்க முயல்வதாகவும் விமர்சனம்.
உதகையில் பழங்குடியின மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம். தெப்பக்காடு முகாமில் யானைகளுக்கு கரும்பு வழங்கி மகிழ்ந்தார் முதல்வர் மு. க.ஸ்டாலின்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
அந்தமான் நிகோபார் பகுதியில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை. கேரளாவில் வரும் 27ஆம் தேதி பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
சென்னை குன்றத்தூர் - பல்லாவரம் சாலையில் 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம். மாற்று இடம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதம்.
சேலம் சங்ககிரி அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு. பேருந்தின் முன் பக்க கதவு மூடப்படாததே விபத்துக்கு காரணம் என குழந்தையின் தந்தை புகார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு. திடீரென சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி.
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் தசாவதாரம் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு. வரும் 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிப்பு.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி மனு. பணி நியமனம் செய்ய உத்தரவிடும்படி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
முத்துநகர் உள்ளிட்ட 3 விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு முன்பதிவு பெட்டி . கோடை விடுமுறையில் கூட்டம் அலைமோதும் நிலையில், தெற்கு ரயில்வே அறிவிப்பு.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சவுதி அரேபியா பயணம். 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்து.