Headlines pt
இந்தியா

Headlines|இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடும் டிரம்ப் முதல் பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடும் டிரம்ப் முதல் பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • பயங்கரவாதம் செழித்து வளர பாகிஸ்தான் உதவுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு. அமைதியாக வாழ வேண்டுமானால் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தானே அழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்.

  • பயங்கரவாதம் தொடர்ந்தால் பேச்சுவார்த்தையோ, வர்த்தகமோ நடைபெறாது என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை. ரத்தம் பாயும் நேரத்தில் தண்ணீர் பாய முடியாது என நதிநீர் பங்கீட்டை குறிப்பிட்டு பிரதமர் மோடி திட்டவட்டம்.

  • இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரிகள் கூட்டம். இனி தாக்குதல் நடத்த வேண்டாம் என பரஸ்பரம் முடிவு.

  • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத யுத்தத்தை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு. சண்டையை நிறுத்தாவிட்டால் இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என எச்சரித்தாகவும் பேட்டி.

  • அமெரிக்க அதிபரின் வர்த்தக நிபந்தனையை ஏற்றுதான் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதா?. மத்திய அரசு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.

  • பாகிஸ்தான் விவகாரத்தில் வர்த்தகம் தொடர்பாக இந்தியாவிடம் அமெரிக்கா பேசவில்லை. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்.

  • பாகிஸ்தான் அணு ஆயுத தளமான கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என இந்திய விமானப் படை விளக்கம்.

  • பாகிஸ்தானுக்கு சரக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பியதாக வெளியான தகவலுக்கு சீனா மறுப்பு. தகவலில் துளியும் உண்மை இல்லை என திட்டவட்டம்.

  • தமிழகத்தையே அதிர வைத்த பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு..இன்று தீர்ப்பளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்.

  • சேலம் மாவட்டம் மேட்டூர், கிருஷ்ணகிரியில் கனமழை... மேட்டுப்பாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்.

  • தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என கணிப்பு.

  • மதுரை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு.. தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்த பக்தர்கள்.

  • சித்ரா பௌர்மணியையொட்டி திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள். இரண்டாவது நாள் இரவிலும் கிரிவலம் வந்து சாமி தரிசனம்.

  • இந்தியா - பாகிஸ்தான் சண்டையால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி மீண்டும் தொடக்கம்... ஜூன் 3ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு.