இந்தியாவின் எல்லை மாநிலங்களில் 26 இடங்களை குறிவைத்து ட்ரோன்களை ஏவிய பாகிஸ்தான். விமான நிலையங்கள், விமானப்படை தளங்களை தாக்க நடைபெற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படை வட்டாரங்கள் தகவல்.
பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்களை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் இந்தியா தாக்குதல். சில ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு.
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்புரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் என ANI செய்தி நிறுவனம் தகவல். குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்.
ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு. பாகிஸ்தான் தாக்குதலால் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி சுமார் 5 மணி நேரம் ஆலோசனை. பாகிஸ்தானுடனான மோதலில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதித்ததாக தகவல்.
சைபர் தாக்குதல் நடைபெற்றால் வங்கிக் கணக்குகள், பணப்பரிமாற்ற சேவைகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை. வங்கிகள், காப்பீட்டு நிறுவன தலைமை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.
பாகிஸ்தானிற்கு 850 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல். நிதி பயங்கரவாத செயல்களுக்கு திருப்பப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.
ஸ்ரீநகர், சண்டிகர், லூதியானா, சிம்லா உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் வரும் 14ஆம் தேதி வரை மூடல்.. பாதுகாப்பு கருதி நடவடிக்கை.
போர் பதற்றம் காரணமாக பஞ்சாபிலிருந்து அவசரமாக வெளியேறிய தமிழக மாணவர்கள். டெல்லியிலிருந்து சென்னை அழைத்து வர ஏற்பாடு.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு. தர்மசாலாவில் இருந்த டெல்லி, பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பு வந்தேபாரத் ரயில் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
நெல்லையில் அமைக்கப்படும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்.. சென்னை பல்கலை.யில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விற்கான, ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு.