இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்.. யாருக்கு அதிக பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்.. யாருக்கு அதிக பாதிப்பு தெரியுமா?

webteam

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்போரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரா. அங்கு மத்திய அரசு ஏழாம் தேதி வெளியிட்ட தகவலின்படி 868 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான புள்ளிவிவரத்தின்படி, 21 வயதில் இருந்து 30 வயது வரையிலான இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வயதுடையவர்களில் மொத்தம் 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் யாரும் உயிரிழக்கவில்லை.

31 வயதில் இருந்து 40 வயதிலானவர்கள் 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 41 முதல் 50 வயது வரை உள்ளவர்களில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 5 பேரும் மரணமடைந்துள்ளனர்.

51 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 107 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 11 பேரும் பலியாகியுள்ளனர். 61 வயதில் இருந்து 70 வயது வரை உள்ள முதியவர்களில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தான் அதிகமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 71 வயதில் இருந்து 80 வயதில் உள்ளவர்களில் 28 பேர் பாதிக்கப்பட்டு, 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது இறப்பு விகிதத்தில் 28.57 சதவிகிதமாகும். 81 வயதில் இருந்து 90 வயது உடைய முதியவர்களில் 10 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.