இந்தியா

2-ம் பிரசவத்தில் பெண் குழந்தை பெறும் தாய்க்கும் சலுகைகள் அளிக்க மத்திய அரசு பரிசீலனை

நிவேதா ஜெகராஜா

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தையைப் பெறும் தாய்க்கும் பிரசவ கால சலுகைகளை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

முதல் பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு `பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக கர்ப்ப காலத்தில் 5,000 ரூபாய் உதவித் தொகை மற்றும் மருத்துவ வசதிகள், ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவை மத்திய அரசால் அளிக்கப்படுகின்றன.

இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் அம்மாக்களுக்கும், இந்த சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பெண் குழந்தை பிறப்பதை தவிர்க்க பாலினத்தை அறியும் முயற்சியை கைவிடச் செய்யும் நோக்கில் இந்த சலுகை வழங்க திட்டமிட்டுள்ளதாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.