Headlines facebook
இந்தியா

Headlines|காவல்நிலையத்தில் ஆஜரான சீமான் முதல் GOOD BAD UGLY டீசர் கொண்டாட்டம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, காவல்நிலையத்தில் ஆஜரான சீமான் முதல் குட் பேட் அக்லி டீசர் கொண்டாட்டம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய காவல்துறை.

  • என்ன பாலியல் குற்றம் செய்தேன்?; நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? என சீமான் கேள்வி. நடிகை உடனான உறவு திருமணம் வரை செல்லவில்லை என்றும் விளக்கம்.

  • திமுக கூட்டணியில் விரிசல் விழாது. உங்கள் ஆசை நிறைவேறாத என்றும், ஒற்றுமையை கண்டு சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பேச்சு.

  • தொகுதி மறுசீரமைப்பு மூலம் நிரந்தர அதிகாரத்தை பெற பாஜக முயற்சிக்கிறது. தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட்டால், புரட்சி வெடிக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை.

  • போடி அரசு கல்லூரி விடுதியில் உயிரிழந்த நெல்லை மாணவரின் உடலில் எறும்பு கடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன. உடலில் காயங்கள், சிதைவுகள் எதுவும் இல்லை என்றும், புதிய தலைமுறைக்கு கிடைத்த முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.

  • உத்தராகண்ட்டின் பத்ரிநாத் அருகே திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள். 33 பேர் இதுவரை மீட்பு, பனிப்பொழிவால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்.

  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசியபோது வாக்குவாதம்.

  • அமெரிக்காவை ஜெலன்ஸ்கி அவமதித்துவிட்டதாக ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு. உக்ரைன் அதிபர் அமைதிக்கு எப்போது தயாராகிறாரோ, அப்போது வரலாம் என்றும் கருத்து.

  • அதிபர் ட்ரம்பிற்கும், அமெரிக்காவிற்கும் நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி. உக்ரைனுக்கு நீடித்த அமைதியே தேவை என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவு.

  • சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா. கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்படலாம் என தகவல்.

  • யூடியூப்பில் வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்ற குட் பேட் அக்லி டீசர். பல்வேறு கெட்அப்களில் அஜித் வரும் காட்சிகள் மாஸாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கொண்டாடும் ஏகே ரசிகர்கள்.