தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் சதமடித்த வெயில். திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவு.
மக்களவைத் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாட்டின் குரல் நெறிக்கப்படும் அபாயம் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து. மக்கள் தொகை மேலாண்மை மீது அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தல்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. தமிழகத்தில் 2026 மே மாதத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என அண்ணாமலை சூளுரை.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ஓசூர் அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம். வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
கோயில் நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களை அனுமதிக்கூடாது. பக்தி பாடல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
இந்தியாவுக்கு பரஸ்பர வரி, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. பிற நாடுகளால் பல தசாப்தங்களாக ஏமாற்றப்பட்டு வருவதை இனி நடக்க விடமாட்டோம் என்றும் சூளுரை.
ராணுவ உதவிகளை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த உளவுத் தகவல்களையும் நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு. அமெரிக்காவின் உளவு தகவல்களை உக்ரைனுக்கு பகிர பிரிட்டனுக்கும் தடை விதித்தது.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது நியூசிலாந்து. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் வரும் 9ஆம் தேதி பலப்பரீட்சை.
விக்ரமின் வீர தீர சூரன் படத்திலிருந்து வெளியானது முதல் பாடல். அடி ஆத்தி எனத் தொடங்கும் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு.