தமிழகத்தில் இன்று தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்வு எழுதும் நிலையில், மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்.
காங்கிரஸை விட பாஜக ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டிற்கு 342 சதவீத அதிக மானியம் மற்றும் உதவி. 2014 முதல் 2024 வரை தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 2 லட்சத்து 92 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் நிர்மலா சீதாராமன் பேச்சு.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.
இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் யாரும் வடிவமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி.
உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் காவலர் அடித்துக் கொலை. மது அருந்தும்போது சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிந்தது.
காவலர்களுக்கே பாதுகாப்பு துளியும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம். காவலர் கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் இருவர் உட்பட 4 கவுன்சிலர்கள் அதிரடி நீக்கம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக நடவடிக்கை.
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு. 3 எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.
நடிகர் சிவாஜி கணேசனின் "அன்னை இல்லம்" வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரிக்கை. நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் அல்ல என மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை அறிக்கையை பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல் துறை. முன்னாள் காதலனுடன் இணைந்து நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தியதாக தகவல்.
கேரளாவில் நகைக்கடையில் வாடிக்கையாளரின் நகையை கேஸ் லைட்டர் வைத்து ஊழியர் பற்ற வைத்தபோது விபரீதம். கேஸ் கசிவால் பற்றி எரிந்த லைட்டரை, ஊழியர் கடைக்கு வெளியே கொண்டு வந்து வீசியதும் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சி.
கேரளாவில் நகைக்கடையில் வாடிக்கையாளரின் நகையை கேஸ் லைட்டர் வைத்து ஊழியர் பற்ற வைத்தபோது விபரீதம். கேஸ் கசிவால் பற்றி எரிந்த லைட்டரை, ஊழியர் கடைக்கு வெளியே கொண்டு வந்து வீசியதும் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சி.
10 ஆயிரம் முழு நேர ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை அறிவிப்பு. பாதி எண்ணிக்கையிலான பிராந்திய அலுவலகங்களை மூடவும் திட்டம்.
ஐபிஎல் லீக் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி. 26 பந்துகளில் 70 ரன்கள் விளாசிய நிகோலஸ் பூரன்.
மதுரையில் "வீர தீர சூரன்" படத்தை காண இருசக்கர வாகனங்கள், ஆட்டோவில் பேரணியாக வந்த விக்ரம் ரசிகர்கள்.
அதிக ஒலி எழுப்பி போக்குவரத்துக்கு இடையூறு செய்த நிலையில், அறிவுரை வழங்கிய காவல்துறையினர்.