Headlines facebook
இந்தியா

Headlines|தொகுதி மறுவரையறைக்கு எதிராக கூட்டம் முதல் நீதிபதி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, தொகுதி மறுவரையறைக்கு எதிராக கூட்டம் முதல் நீதிபதி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தொகுதி மறுவரையறைக்கு எதிராக சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தொடக்கம் என வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.

  • தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொள்ள கேரளம், பஞ்சாப், தெலங்கானா மாநில முதல்வர்கள் சென்னை வருகை. பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனசேனாவும் கூட்டத்தில் பங்கேற்கிறது.

  • மக்களின் கோபத்தை மடைமாற்ற மெகா நாடகத்தை திமுக அரங்கேற்றுவதாக அண்ணாமலை விமர்சனம். பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு.

  • கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க இன்று தொடங்குகிறது 18ஆவது ஐபிஎல் திருவிழா. முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.

  • ஊழலை மறைக்கவே சிலர் மொழி அரசியல் செய்வதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம். மாநில மொழி பேசுபவர்களான தாங்கள் அவற்றை எப்படி எதிர்ப்போம் என்றும் கேள்வி.

  • அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கத் தயாரா? மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது இடைமறித்து வைகோ கேள்வி

  • வேறு எங்கோ இருந்து கொண்டு அதிமுகவை பறிக்க ஒருவர் முயற்சிப்பதாக பாஜக மீது அமைச்சர் தங்கம் தென்னரசு மறைமுக விமர்சனம். அதிமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

  • கூட்டணிக் கணக்கில் நாங்கள் ஏமாற மாட்டோம் என பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி உறுதி. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் பதில்.

  • ஆடு நனையுதே என ஓநாய் கவலைப்பட தேவையில்லை. கூட்டணி விஷயத்தில் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என முதல்வர் கூறியதற்கு இபிஎஸ் பதிலடி.

  • பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி நாக்பூர் பயணம். அண்மையில் வன்முறை நிகழ்ந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

  • திருப்பதி கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

  • நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு. வீட்டில் நடந்த நிகழ்வுக்கும், பணியிட மாற்றத்திற்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம்.

  • மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர். இருவரும் ஆர்வமுடன் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல்.

  • ரெட்ரோ படத்திலிருந்து வெளியானது கனிமா பாடல். சூர்யா, பூஜா ஹெக்டே இணைந்து நடனமாடும் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு.