தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம். கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழகம் வருகை.
தினந்தோறும் கொலைப்பட்டியலை பார்ப்பதே திமுக அரசின் சாதனை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. காவல் துறை இருக்கிறதா என்றே தெரியவில்லை எனவும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் பேட்டி.
சட்டப்பேரவையிலிருந்து ஓடாதீர்கள் நான் கூறும் பதிலை கேட்டுவிட்டு செல்லுங்கள் என அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபோது முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை எம்எல்ஏ வேல்முருகன் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு. அதிக பிரசங்கித் தனமாக நடந்து கொள்வதாக வேல்முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
திமுக கூட்டணியில் இருந்து முதல்வர், தம்மை வெளியேற்றினால் கவலைப்பட போவதில்லை என புதிய தலைமுறைக்கு தமிழ வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி.
சபையில் நடந்ததை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல; மரபும் அல்ல என வேல்முருகன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு போராடும்.தமிழ்நாடு வெல்லும் என டி. ஷர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம். அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..
திமுக எம்.பி.க்கள் அவை மரபுகளை மீறியதாக மாநிலங்களவை குறிப்பில் தகவல். 10 பேரை சஸ்பெண்ட் செய்யப்படுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு.
முதல்வரின் வீடுகள் மறு கட்டுமானத் திட்டம். நடப்பாண்டு, முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு. விரைவில் மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
நாளை தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா. 23ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வருகை.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடம். 126ஆவது இடத்தில் இருந்து 118ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்.
ஒடிசாவில் காெளுத்தும் கோடை வெயிலை தவிர்க்க பள்ளிகள் நேரத்தில் மாற்றம். காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிப்பு.
விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் டிரைலர் வெளியீடு. ஆக்சன் காட்சிகள் நிறைந்த முன்னோட்டத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு.