1 மணி செய்திகள் முகநூல்
இந்தியா

1 மணி செய்திகள்|இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசு மழை முதல் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம் வரை!

இன்றைய 1 மணி செய்தியானது, இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசு மழை முதல் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என டி. ஷர்ட் அணிந்து எம்பிக்கள் போராட்டம். அமளி காரணமாக முடங்கியது நாடாளுமன்றம்.

  • தினந்தோறும் கொலைப்பட்டியலை பார்ப்பதே திமுக அரசின் சாதனை என இபிஎஸ் குற்றச்சாட்டு. காவல் துறை இருக்கிறதா என்றே தெரியவில்லை எனவும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் பேட்டி.

  • சட்டப்பேரவையிலிருந்து ஓடாதீர்கள், நான் கூறும் பதிலை கேட்டுவிட்டு செல்லுங்கள் என அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தபோது முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • ஈரோடு அருகே ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் 5 பேரை பிடித்து காவல் துறை விசாரணை.

  • டாஸ்மாக் அலுவலகத்தில் இரவில் சோதனை நடக்கவில்லை என அமலாக்கத்துறை வாதம். இந்நிலையில், பொய் சொல்ல வேண்டாம்; அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு.

  • டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக வரும் 25ஆம் தேதி வரை அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கத் தடை. சோதனை நடத்த காரணமான வழக்குகளின் விவரங்களை பதில் மனுவில் தெரிவிக்கவும் உயர் நீதிமன்றம் ஆணை.

  • சென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக மதுக்கடைகளில் முதல்வர் படத்தை ஒட்டிய விவகாரம். பாஜகவைச் சேர்ந்த 4 பேர் கைது.

  • சினிமாவில் உள்ளவரை வைத்து அரசியலில் வித்தை காட்டுவதாக தமிழக வெற்றிக்கழகத்தை சாடிய ஹெச்.ராஜா. நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியைச் சேர்ந்தவர் என த.வெ.க. பொருளாளர் பதிலடி.

  • சென்னையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் குடோன்களில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி சோதனை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல்.

  • ஆண்டிபட்டி அருகே இரண்டு விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம். மைத்துனரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது, காவல்துறையின் விசாரணையில் அம்பலம்.

  • அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. ஏப்ரல் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

  • சென்னை மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே இன்று மின்சார ரயில் சேவை ரத்து. பராமரிப்பு பணிகள் காரணமாக மாலை வரை பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

  • மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது ஆபரணத் தங்கம் விலை. சென்னையில் சவரனுக்கு160 ரூபாய் உயர்ந்து 66ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை.

  • கோவையில் ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு. பாம்பு கடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சோகம்.

  • இலங்கையிலிருந்து மதுரை வந்த விமானத்தில் அரிய வகை உயிரினங்கள் கடத்தல். ஆமைகள், பல்லிகள், பாம்புகள் உட்பட 64 உயிரினங்களை பறிமுதல் செய்து விசாரணை.

  • வாட்ஸ் ஆப் கணக்குடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் புதிய வசதி விரைவில் அறிமுகம். தொழில்நுட்ப ரீதியான சோதனை வாட்ஸ் அப் மேற்கொண்டுள்ளதாக தகவல்.

  • சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசு மழை. 58 கோடி ரூபாய் வழங்கப்படும் என BCCI அறிவிப்பு.