Headlines facebook
இந்தியா

Headlines|நாடு திரும்பிய பிரதமர் முதல் நாளை தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் வரை !

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, நாடு திரும்பிய பிரதமர் முதல் நாளை தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் வரை

PT WEB
  • இந்தியா - மொரீஷியஸ் இடையே கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து. 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.

  • எங்களிடமே வரி வசூலித்து விட்டு எங்களை சிறுமைப்படுத்துவது தான் நாகரிகமா? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி.. அநாகரிகத்தின் அடையாளமே மத்திய அரசுதான் என விமர்சனம்.

  • மேடையில் வீரவசனம் பேசும் முதல்வர், என்ன ஆட்சி செய்தார் என தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என திர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால்.

  • தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து அழைப்பு விடுத்த தமிழ்நாடு குழு. துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரையும் சந்தித்து அழைப்பு

  • சட்டப்பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல். மெரீனா, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்பட 100 இடங்களில் நேரலையில் காண சென்னை மாநகராட்சி ஏற்பாடு.

  • மத்திய அரசு மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூட பெரியார் குறித்த சர்ச்சை கிளப்ப படுகிறது. பெரியார் கூறியது வருத்தமெனில் மும்மொழி கொள்கையை திணிக்காமல் இருக்கலாமே என நிர்மலா சீதாராமனுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி.

  • தனது இரு மகன்களும் இருமொழிக் கொள்கையிலேயே கல்வி பயின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்.

  • கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை. கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையால் குளிர்ச்சி.

  • தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் கோடை விடுமுறை. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 25ஆம் தேதியிலிருந்து விடுமுறை தொடங்கும் என அறிவிப்பு.

  • ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கூறல் மீன். 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு மீன்கள் ஏலம் போன ஆச்சரியம்.

  • சக வீரர்களுடன் நடனமாடி அசத்திய எம்.எஸ்.தோனி. ரிஷப் பந்த் இல்ல நிகழ்ச்சியில் களைகட்டிய கொண்டாட்டம்.

  • 200 பேர் தங்கள் பிடியில் உள்ளதாக பலுச் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு. 24 மணி நேரத்திற்குள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவில்லையென்றால் அனைவரையும் கொன்று விடுவோம் என பாகிஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை.