பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதாகக் கூறிவிட்டு திடீர் மாற்றம் ஏன் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி. தமிழ்நாடு அரசு தங்களுக்கு அனுப்பிய கடிதத்தையும் வெளியிட்டு பதிவு.
தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிக் கல்வி குறைந்து வருவதாக தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு. சிறுபான்மையினருக்கான பள்ளிகளில் 3 மொழிகளில் ஒன்றாக தெலுங்கு, உருது மொழிகள் பயிற்றுவிக்கப்படுவதாகவும் பேச்சு.
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி மறுப்பு என திருச்சி சிவா குற்றச்சாட்டு. அனைவரையும் குழப்பும் வகையில் தர்மேந்திர பிரதான் பேசியதாகவும் சாடல்.
தேசியக் கல்விக்கொள்கையை ஏற்பதாக கடிதத்தில் கூறப்படவில்லை என தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம். பழைய கடிதத்தை காட்டி மத்திய அமைச்சர் தவறான தகவலை கூறுவதாக திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி.
தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு ஏற்காது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்.
காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வுபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா? தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
செங்கல்பட்டு, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி.
கனமழை காரணமாக என்எல்சி சுரங்கங்களில் மண் சரிவு. நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்.
சென்னை நடைபெற்ற பாஜக நிர்வாகியின் மகள் திருமண விழாவில் சந்தித்துக் கொண்ட அண்ணாமலை - சீமான். FIGHT பண்ணிக்கிட்டே இருங்கண்ணா என சீமானுக்கு கை கொடுத்த அண்ணாமலை.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மார்ச் 14 முதல் Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல். இனி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் விஜயின் பாதுகாப்புக்காக உடன் இருப்பார்கள்.
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கு. குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.
தங்கள் தலைமையில்தான் கோயில் திருவிழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
ஸ்ரீவைகுண்டம் பள்ளி மாணவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.
ஏப்ரல் 2 ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு.
வெறிநாய் கடித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வடமாநில இளைஞர் தற்கொலை. கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு.
மொரீசியஸ் உடனான இந்தியாவின் நட்புறவு எல்லையற்றது என பிரதமர் மோடி பேச்சு. பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதும் அறிவிப்பு.
பாகிஸ்தானில் ரயிலில் இருந்து கடத்தப்பட்ட 30 ராணுவ வீரர்களை கொன்றதாக பலூச் விடுதலைப்படை அறிவிப்பு. மேலும் 214 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாகவும் தகவல்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்தது ஏர்டெல். ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய சேவை கிடைக்கும் என அறிவிப்பு.