Headlines facebook
இந்தியா

Headlines|சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி முதல் நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி முதல் நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

PT WEB
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் வக்ஃப் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம். மணிப்பூர் பிரச்சினை, அமெரிக்காவின் வரி நெருக்கடி உள்ளிட்ட விவகாரங்களை கிளப்பி எதிர்க்கட்சிகள் முடிவு.

  • நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக முடிவு. அனைத்து கட்சிகளுடன் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை மேற்கொள்ள எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்.

  • நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரம். சாம்பியன்ஸ் கோப்பையை 3ஆவது முறையாக வென்று அசத்தல்.

  • சென்னை மெரினா, பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் போட்டியை கண்டுகளித்த ரசிகர்கள் பல்வேறு நகரங்களில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

  • சென்னையை போன்று மும்பை, கொல்கத்தா, போபால் உட்பட நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளம். ஜம்மு காஷ்மீரில் பட்டாசுகள் வெடித்து உற்சாகம்.

  • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரும் பாராட்டு.

  • மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என ஆந்திர மாநில தெலுங்கு தேசம் எம்பி காளிசெட்டி அப்பல நாயுடு அறிவிப்பு.

  • காங்கிரசில் உள்ள பாஜக ஆதரவாளர்களை எப்போது கட்சியில் இருந்து நீக்குவீர்கள்? ராகுல் காந்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாட்கள் நடைபெறும், வருடாந்திர தெப்ப உற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது. சீதா, லட்சுமணருடன் கோதண்டராமராக தெப்பலில் எழுந்தருளிய ஏழுமலையான்.

  • அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி. டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில் அங்கம் வகிப்பதே சொத்து மதிப்புசரிவுக்கு காரணம் என நிபுணர்கள் கணிப்பு.

  • ஸ்டார் லிங்க் இணையத்தை ஆஃப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் சரிந்துவிடும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஸ்டார் லிங்க் நிறுவனர் எலான் மஸ்க் எச்சரிக்கை.

  • கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி. லிபரல் கட்சியின் புதிய தலைவராக கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை அறிவிப்பு.