இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் விடுவிப்பு

Sinekadhara

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மாவோயிஸ்டுகளால் ஏப்ரல் 3ஆம் தேதி கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 3ஆம் தேதி சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து ஜம்முவைச் சேர்ந்த கோப்ரா கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் என்பவரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், ``கான்ஸ்டபிள் ராகேஸ்வர் சிங் மன்ஹாஸ் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார். அவர் எங்கள் சிறையில் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த அழைப்பின்போது மற்ற தகவலை தருகிறோம்" என போன் மூலம் சுக்மா மாவட்ட பத்திரிகையாளரிடம் கூறியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ராகேஸ்வர் சிங்கின், மனைவியும், குழந்தையும் அவரை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பிறகு ராகேஸ்வர் சிங்கின் புகைப்படத்தை மாவோயிஸ்டுகள் வெளியிட்டனர். இந்நிலையில் கடத்தப்பட்ட ராகேஸ்வர் சிங் தற்போது மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.