இந்தியா

ரஜினி வில்லனுக்கு மாவோயிஸ்ட் எச்சரிக்கை

ரஜினி வில்லனுக்கு மாவோயிஸ்ட் எச்சரிக்கை

Rasus

நக்சலைட் தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்த நடிகர் அக்ஷய் குமார் மற்றும் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மாவோயிஸ்ட்டு அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த மார்ச் மாதம் சத்தீஸ்கரில் வீரமரணமடைந்த 12 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.  இவரைத் தொடர்ந்து, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு, 6 லட்ச ரூபாய் நிதியுதவி செய்தார். 

இந்நிலையில், மாவோயிஸ்ட்டு அமைப்பினர், பாஸ்தர் பகுதியில் சில துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர். அதில், ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகத்தான் பிரபலங்களும், தனி நபர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாறாக ஜவான்களின் பக்கம் நிற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், ரஜினி நடிக்கும் ’2.0’ படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.