பீகாரில் ரயில் நிலையத்தை தீ வைத்து கொளுத்திய மாவோயிஸ்டுகள், 2 அதிகாரிகளை கடத்திச் சென்றுள்ளனர்.
பீகாரில் உள்ள மசுதன் என்ற இடத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு ஆயுதங்களுடன் வந்த மாவோயிஸ்டுகள், ரயில் நிலையத்திற்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து ரயில் நிலையத்தின் துணை மேலாளர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளையும் அவர்கள் கடத்திச் சென்றனர்.
அத்துடன் மசுதன் வழியாக இனிமேல் ரயில்களை இயக்கினால், பணயக் கைதிகளாக உள்ள அதிகாரிகள் இருவரையும் கொல்லப்போவதாகவும் மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக மசுதன் வழியாக ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.