இந்தியா

"நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டாம்" - உள்துறை இணை அமைச்சர்

"நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்ய வேண்டாம்" - உள்துறை இணை அமைச்சர்

webteam

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார். 

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்புக்கு மாவோஸ்ட்டுகள்தான் முதல் அச்சுறுத்தல் எனக் கூறியதாகவும் ஆனால் அத்தகைய அமைப்புகளுக்கு ராகுல் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதாக கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். 

மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டில் ஒரே ஒரு என்ஜிஓவுக்குதான் இடம் என்றும் அதன் பெயர் ஆர்எஸ்எஸ் எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். மற்ற என்ஜிஓக்களை மூடிவிடலாம் எனவும் செயற்பாட்டாளர்களை கைது செய்துவிடலாம் என்றும் ராகுல் சாடியிருந்தார்.