இந்தியா

புனே ‘ஸ்மார்ட் சிட்டி’யா? - கனமழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதி

Veeramani

புனே விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் கடும் அவதியை சந்தித்தனர்.

புனே நகரின் லோஹேகான், தனோரி, சிவாஜிநகர் மற்றும் பிற பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று பிற்பகலில் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, சுமார் 300 பயணிகள் புனே விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.

இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட 90 வயதான மூத்த குடிமகன் சோனாலி ராஜோரின் குடும்பத்தினர் பேசுகையில், “ போக்குவரத்து நெரிசலால் டாக்ஸி கிடைக்காமல் விமான நிலையத்தில் சிக்கித் தவித்தோம். இரவு 8:30 மணிக்கு வாகனத்தை தேட தொடங்கி இறுதியாக நான்கு மணி நேரம் கழித்து நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்கு சென்றோம்” என தெரிவித்தனர்.

"விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் மழை மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுஎன்று விமந்தல் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

லோகேகான், தனோரி பகுதிக்குச் சென்றால், புனேவை 'ஸ்மார்ட் சிட்டி' என்று அழைக்க முடியாது. இந்த பகுதியில் முறையான சாலைகள் இல்லை, வடிகால் இல்லை, நீர் வழங்கல் இல்லை, போக்குவரத்து மேலாண்மை இல்லை, ஆனால் சொத்து வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது. இப்பகுதியில் 4 கிமீ தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.