மனோஜ் ஜராங்கே
மனோஜ் ஜராங்கே ட்விட்டர்
இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு: மீண்டும் களத்தில் குதித்த மனோஜ் ஜராங்கே.. ஜன.20 மும்பையில் 10 லட்சம் வாகனங்கள்!

Prakash J

மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அம்மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இடஒதுக்கீடு பெறுவதற்காக, மராத்தா சமூக தலைவர் மனோஜ் ஜராங்கே அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் அக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 20-ஆம் தேதி முதல் மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்

மனோஜ் ஜராங்கே

இதுகுறித்து அவர், “ஜனவரி 20-ஆம் தேதி மராத்தா சமூக போராட்டக்காரர்களுக்குத் தேவையான பொருட்களுடன் சுமார் 10 லட்சம் வாகனங்கள் மும்பையை நோக்கிவரும். அருகிலுள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஜல்னா மாவட்டத்தின் அந்தர்வாலி சாரதி கிராமத்திற்கு போராட்டக்காரர்கள் வருகை தருவார்கள். அங்கிருந்து மும்பை நோக்கி நடக்க ஆரம்பிப்போம். மராத்தா சமூக மக்கள் தனித்தனி குழுக்களாக மும்பைக்கு வருவார்கள். ஒவ்வொரு குழுவிலும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மக்கள் இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ’உன்னை மிஸ் செய்கிறேன்’ - மகனைக் காணாமல் தவிக்கும் ஷிகர் தவான்: இணையத்தில் வைரலாகும் உருக்கமான பதிவு