கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் இன்று பொறுப்பேற்றார். நாளை அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
முதலமைச்சர் அலுவலகம் சென்ற பாரிக்கர் ஆவணங்களில் கையெழுத்திட்டார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தொய்வே, சில பாஜக அமைச்சர்கள் தோல்வி அடைய காரணமாக அமைந்தது என்றும் நிர்வாகத்தை தான் முறைப்படுத்த போவதாகவும் பாரிக்கர் கூறியுள்ளார். கோவா மாநில முதலமைச்சராக பாரிக்கர் நேற்று பதவியேற்றார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.