இந்தியா

விமர்சனங்கள்தான் வலிமை: பிரதமர் மோடி

விமர்சனங்கள்தான் வலிமை: பிரதமர் மோடி

webteam


ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் நமது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ரமலான் நோன்பைத் தொடங்கியிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியாவில் வசித்து வருவது நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை இந்தியாவின் வலிமை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு விஷயங்களில் நாம் வேற்றுக்கருத்துகளை கொண்டிருந்தாலும் ஒற்றுமையாக வாழ்வதை உலகுக்கு உணர்த்தும் சமூகமாக இந்தியச் சமூகம் திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார்.