இந்தியா

"கொரோனா தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்"- பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

Rasus

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 5 யோசனைகளை தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். அதில், குறிப்பிட்ட காலத்திற்கு தடுப்பூசி போட அரசு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் குறிப்பிட்ட காலத்திற்குள் மருந்துகளை வழங்க உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவிப்பர் எனவும் கூறியுள்ளார்.

தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பது தொடர்பாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ள மன்மோகன் சிங், 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

முன்களப்பணியாளர்கள் யார் என்பதை அறியவும், 45 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தடுப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்க தேவையான நிதி, சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார்.