Manipur violence Twitter
இந்தியா

மணிப்பூர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியின் வீட்டை அடித்து நொறுக்கிய மெய்தி இன பெண்கள்!

மணிப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை மெய்தி இனப்பெண்கள் அடித்து நொறுக்கினர்.

PT WEB

மணிப்பூர் கலவரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் காணொளியொன்று நேற்று முன்தினம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதில் முக்கிய குற்றவாளியான 32 வயதான மெய்தி இனத்தை சேர்ந்த ஹுய்ரேம் ஹெரோடா என்பவர் நேற்று காலை மணிப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

ஹுய்ரேம் ஹெரோடா

இந்நிலையில் நோங்க்பாக் செக்மாய் எனும் இடத்தில் உள்ள அவரது வீட்டை, அவரின் சொந்த கிராம மக்களே அடித்து நொறுக்கியுள்ளனர். ஹெய்ரெம் ஹரோடாவின் செயல் ஒட்டுமொத்த மெய்தி இன மக்களுக்கே அவமானத்தை தேடி தந்ததாக கூறி அவரது வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கினர்.