மோரே கலவரம்
மோரே கலவரம் PT
இந்தியா

”என்னுடைய மாநிலம் பற்றி எரிகிறது; உதவி செய்யுங்க” - மேரிகோமின் கோரிக்கையும் மணிப்பூரின் நிலையும்!

Jayashree A

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மணிப்பூர் மாநிலத்தில் மோரே நகரில் வசிக்கும் மக்களிடையே இனக்கலவரம் வன்முறையாக மாறி உள்ளதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு நிலவும் பதற்றம் குறித்து கேட்டறிந்துள்ளார். முன்னதாக, நிலமையை கட்டுக்குள் கொண்டுவர போதுமான ராணுவ படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

என்னதான் பிரச்னை மணிப்பூரில்? கலவரம் வெடித்தது எப்படி?

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே பெரும் மோதல் வெடித்தது.

மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி போராடுவதால் மோதல் வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இந்த மோதல் வெடித்தது. மோரே நகரிலும் நேற்று இரவு இந்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது.

மோரே நகரில் பல வீடுகள், தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பிரெனிடம் நிலைமையை கேட்டறிந்த அமித்ஷா!

மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பிரென் சிங்கிடம் (BIREN SINGH) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். மாநிலத்தின் பல பகுதிகளில் பழங்குடியின மக்கள் பேரணிகளில் ஈடுபட்ட நிலையில், மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க கூடுதல் அதிரடிப்படையினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே மாநிலம் முழுவதும் போதுமான அளவில் ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இரவு நேர ஊரடங்கும் பல மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேரிகோம் வேதனை

மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் மிகுந்த துயரத்தைத் தருவதாக, உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயலாற்றி, கலவரம் வெடித்த பகுதிகளில் அமைதியைக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கலவரத்தில்

பலர் தங்கள் உறவினர்களை இழந்துள்ளது சொல்லொனா வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேரி கோம் கூறியுள்ளார்.