சங்கி குழுவில் பராசக்தி குழு என விமர்சித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் web
இந்தியா

”சங்கி குழுவில் பராசக்தி குழு..” - விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்!

பராசக்தி படக்குழு டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டதை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்.

Rishan Vengai

பராசக்தி படக்குழுவினர் பிரதமர் மோடியுடன் டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றதை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சங்கி குழு என விமர்சித்துள்ளார். இது திமுகவின் மொழி அரசியலை மீண்டும் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் மோடியுடன் பராசக்தி படக் குழுவினர்பங்கேற்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் வெளியான பராசக்தி திரைப்படம், இந்தி எதிர்ப்பு அரசியலை பேசியது. டெல்லியின் இந்தி ஆதிக்க எதிர்ப்பை பராசக்தி பேசிய நிலையில், அதன் வழியே மீண்டும் மொழி அரசியலை திமுகவினர் கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், பராசக்தி திரைப்பட நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர், பிரதமர் மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.

தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை விவகாரத்தில், பாஜக அரசின் தாக்குதல் என காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ஜனநாயகன் முடக்கம் தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்றும் விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், பராசக்தி படக்குழுவினர் பிரதமருடன் விழாவில் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.

சங்கி குழுவில் பராசக்தி குழு..

இந்தசூழலில் பிரதமர் மோடியுடன் பராசக்தி படக்குழு டெல்லியில் பொங்கல் விழாவில் பங்கேற்றதை, சங்கி குழு பொங்கலில் பராசக்தி குழு என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் முடக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், சங்கி குழு பொங்கலில் பராசக்தி குழு என்றும் விமர்சித்துள்ளார். ஆட்சியில் பங்கு விவகாரத்தில் திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார் காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்.