இந்தியா

உலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம்

உலக வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக இந்தியப் பெண் நியமனம்

rajakannan

பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநரான அன்ஷுலா காந்த் உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். உலக வங்கி குழுமத்தில் நிர்வாக ரீதியாகவும், நிதி மேலாண்மை தொடர்பாகவும் ஏற்படும் சிக்கல்களுக்கு இனி அன்ஷுலா பொறுப்பாவார். 

இதுகுறித்து மால்பஸ் கூறுகையில், “உலக வங்கியில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக அன்ஷுலா காந்தை நியமிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிதி, வங்கி உள்ளிட்ட துறைகளில் அன்ஷுலா 35 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் உடையவர். எஸ்பிஐ வங்கியில் தலைமை நிதி அதிகாரியாக இருந்து பல்வேறு புதுமைகளை கொண்டு வந்தார்” என்றார்.