இந்தியா

காவலாளியை தாக்கிய குடியிருப்புவாசி - சிசிடிவி காட்சி வைரல்

காவலாளியை தாக்கிய குடியிருப்புவாசி - சிசிடிவி காட்சி வைரல்

JustinDurai

அடுக்குமாடிக் குடியிருப்புவாசி ஒருவர் அங்குள்ள காவலாளியை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் வின்ட்சர் பாரடைஸ் சொசைட்டி அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பில் வசித்துவரும் ஒருவர் அங்குள்ள காவலாளியை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குடியிருப்புவாசி ஒருவர் காவலாளியை அடிப்பதும், அதை பெண் ஒருவர் தடுப்பதும் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 10ஆம் தேதி நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து காவலாளி அளித்த புகாரின் பேரில் தாக்கிய குடியிருப்புவாசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடியிருப்பில் புதிதாக குடியேறியுள்ள அந்த நபரிடம் காவலாளி எங்கே போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்நபர் காவலாளியை அடித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: குழந்தை திருமணம் செய்தவர்களுக்கு ஆதரவளித்து போராடிய பிற தீட்சிதர்களும் கைது!