8 வயது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டார்.
ஹரியானா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த சில நாட்களாகவே மாணவி, வழக்கத்திற்கு மாறாக களையிழந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், சிறுமியிடம் விசாரித்தபோது, தனது தந்தை தினசரி தன்னுடன் தவறாக நடப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போயுள்ளார். இதனையடுத்து சிறுமி தன் தந்தையுடன் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் தினசரி குடிபோதையில் வரும் தந்தை, மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். தற்போது அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் குழந்தைகள் கண்காணிப்பு மையத்திலும் சிறுமி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.